பிரித்தானிய மகாராணியாரின் Range Rover காரை விலைக்கு வாங்கிய இந்தியர்! அதே பதிவெண்ணுடன் அப்படியே…

மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மிகவும் விரும்பி பயன்படுத்திய Range Rover காரை இந்திய தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார்.

இந்த காரை இந்திய தொழிலதிபரும் பூனாவாலா குழுமத்தின் எம்.டியுமான யோஹான் பூனாவாலாவால் (Yohan Poonawalla) வாங்கப்பட்டது.
பிராம்லி ஸ்டாக்கர்ஸ் இணையதளத்தில் இந்த காரின் விலை ரூ.2.25 கோடி (£2,24,850) ஆகும்.

யோஹான் பூனாவாலா இந்த காரை எந்த ஏல நடவடிக்கையும் இல்லாமல் தனிப்பட்ட முறையில் வாங்கியுள்ளார். மதிப்புமிக்க இந்த காரை அவர் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார் என்பது வெளியிடப்படவில்லை.

இந்த கார் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய பதிவு எண்ணையே இன்னும் கொண்டுள்ளது என்பது ஒரு சுவாரஸ்யமான விடயமாகும்.

சிறப்பான வரலாற்றைக் கொண்ட இந்த காரை சொந்தமாக்கிக் கொண்டதற்கு பூனாவாலா மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதுபோன்ற அற்புதமான வாகன வரலாற்றைக் கொண்ட காரை அவர் சொந்தமாக வைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாதாரண சூழ்நிலையில், அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய பிறகு காரின் எண் மாற்றப்படுகிறது. ஆனால், மறைந்த ராணி எலிசபெத்-2 பயன்படுத்திய OU16 XVH என்ற அசல் பதிவு எண்ணை இன்னும் கொண்டுள்ளது என்பது கூடுதல் போனஸ் என்று பூனாவாலா கூறினார்.

இந்த 2016 Range Rover SDV8 Autobiography LWB edition கார் Loire blue வண்ணத்தில் ivory upholstery-யுடன் காணப்படுகிறது, மொத்த 18,000 மைல்கள் வரை பயணம் செய்துள்ளது.

இந்த ரேஞ்ச் ரோவர் கார் ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரகசிய விளக்குகள், பொலிஸ் அவசர விளக்குகள் உள்ளிட்ட சிறப்பு மாற்றங்கள் உள்ளன. மஹாராணி காருக்குள் எளிதாக இறங்குவதற்குப் பின்னால் கிராப் ஹேண்டில்களைச் சேர்த்தார்.

அனைத்து மாற்றங்களும் ராணி இரண்டாம் எலிசபெத்துக்காகவே அப்படியே வைக்கப்பட வேண்டும் என்று தான் நினைப்பதாக யோஹான் பூனாவாலா கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *