சூனியக்காரி என ஒதுக்கப்பட்டு குகையில் வாழ்ந்த பிரித்தானிய பாபா வங்கா: அவரின் கணிப்புகள்

லண்டன் பெரும் தீ விபத்து உட்பட பல்வேறு எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தவரை சூனியக்காரி என பிரித்தானிய மக்கள் வெறுத்து ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூனியக்காரி என வெறுத்து
பிரித்தானியாவின் பாபா வங்கா என தற்போது கொண்டாடப்படும் Mother Shipton என்பவரையே, முன்னர் சூனியக்காரி என வெறுத்து ஒதுக்கியுள்ளனர். வடக்கு யார்க்ஷயரில் Knaresborough பகுதிக்கு வெளியே தற்போதும் அவர் வாழ்ந்த குகை உள்ளது.

1547ல் ஹென்றி 8வது மன்னரின் மரணம், 1666ல் லண்டன் பெரும் தீ விபத்து, 1769ல் நெப்போலியன் போனபார்டேவின் எழுச்சி என அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்வுகளை அவர் கணித்துள்ளார்.

Agatha Soothtale என்ற 15 வயது சிறுமிக்கு 1488ல் Ursula Sontheil என்ற Mother Shipton பிறந்துள்ளார். திருமணமாகாத சிறுமி கர்ப்பமுற்றதால் சமூக மக்கள் ஒன்று திரண்டு அப்பகுதியில் இருந்து Agatha Soothtale என்பவரை வெளியேற்றியுள்ளனர்.

எவரும் அடைக்கலம் அளிக்க முன்வராத நிலையில், குகை ஒன்றில் அவர் தஞ்சமடைந்துள்ளார். அந்த குகையில் தான் ஒரு பேய் மழை காலம் Mother Shipton பிறந்ததாக கூறுகின்றனர். பிறந்த போது குழந்தை உர்சுலா அழுவதற்கு பதிலாக அலறியதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் அவரை தேடிச் சென்று
இளம் வயதிலேயே எதிர்காலத்தை கணிக்கத் தொடங்கிய உர்சுலாவை கிராம மக்கள் சூனியக்காரி என கருதினர். 24வது வயதில் டோபி ஷிப்டன் என்பவரை உர்சுலா திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆனால் இரண்டே ஆண்டுகளில் டோபி மரணமடைய, உர்சுலாவே காரணம் என குறிப்பிட்டு கிராம மக்கள் அவரை வெறுத்து ஒதுக்கியுள்ளனர். இதனையடுத்து காட்டுக்குள் குடியேறியுள்ளார் உர்சுலா.

சில ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் அவரை தேடிச் சென்று தங்கள் எதிர்காலம் குறித்து அறிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். 1561ல் மரணமடைந்த அவரை Knaresborough பகுதியிலேயே அடக்கம் செய்துள்ளனர்.

அப்பகுதி தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. மக்கள் அவரை பிரித்தானியாவின் பாபா வங்கா என கொண்டாடி வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *