புற்றுநோய் பாதிப்பு… துறவி ஒருவரின் ஆலோசனையை ரகசியமாக நாடிய சார்லஸ் மன்னர்

புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் மன்னர் சார்லஸ் கிரேக்க துறவி ஒருவரின் ஆன்மீக ஆலோசனையை ரகசியமாக நாடியதாக தகவல் கசிந்துள்ளது.

ரகசிய நட்புறவு
கிரேக்க துறவியான Archimandrite Ephraim என்பவருடன் கடந்த 25 ஆண்டுகளாக ரகசிய நட்புறவை மன்னர் சார்லஸ் பேணி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

1997ல் இளவரசி டயானா இறப்புக்கு பின்னர் தமக்கான வழிகாட்டுதலை மன்னர் சார்லஸ் அந்த துறவியிடம் நாடியதாகவும், இருவரும் அதன் பின்னர் நெருக்கமாக பழகி வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட நிலையில், 67 வயதான Ephraim துறவியை மன்னர் சார்லஸ் ரகசியமாக தொடர்புகொண்டுள்ளார். மன்னருடனான நட்பு தொடர்பில் இதுவரை ஒருமுறை கூட Ephraim துறவி வெளிப்படுத்தியதில்லை.

ஆனால் புற்றுநோய் என தகவல் அறிந்ததும், முதல் முறையாக சார்லஸ் மன்னர் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மன்னர் சார்லஸ் ஒரு ஆன்மீகவாதி என குறிப்பிட்டுள்ள அந்த துறவி, மன்னர் சார்லஸ் ஒரு ஆன்மீக வாழ்க்கை வாழக்கூடியவர் எனவும் தெரிவித்துள்ளார்.

அதோஸ் மலை
நோய் உறுதியான பின்னர் தம்மை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ள துறவி, இந்த நெருக்கடியில் இருந்து அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் Ephraim தெரிவித்துள்ளார்.

கிரேக்க தீபகற்பத்தில் உள்ள அதோஸ் மலைக்கு மன்னர் சார்லஸ் பலமுறை ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

10ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அங்குள்ள மடாலயத்திற்கு Ephraim துறவியை சந்திக்கும் பொருட்டு 8 முறை மன்னர் சார்லஸ் ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *