2024 குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்

குருப்பெயர்ச்சி எல்லா ராசிகளுக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் அதிலும் சில ராசிகளின் பலனின் அடிப்படையில் அது வேறுபடும்.

அந்த வகையில் இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி மே 1 ஆம் திகதி நிகழப்போகிறது. இதனால் ஜோதிட சாஸ்திரத்தின்படி இது சில ராசிகளுக்கு அதிஸ்டத்தை அள்ளிக்குவிக்க போகுகிறது.

இந்த குருப்பெயர்ச்சி ஒருவரின் வாழ்வில் ஏராளமான மாற்றங்களையும், ஏற்றங்களையும் ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை ஆகும். அப்படி அதிஸ்டத்தை அள்ளிக்கொள்ளபோகும் ராசிகள் எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பாாக்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் நீங்கள் இதுவரைக்கும் பட்ட கஸ்டங்கள் ஒரு முடிவுக்கு வரும். குரு பகவான் உங்களுக்கு தொழில் ரீதியான முன்னேற்றதை வழங்கப்போகிறார்.

வேலையில் பதவி உயர்வு உங்களுக்கு கிடைக்கப்போகிறது. நீங்கள் இதுவரைக்கும் பணத்திற்காக கஸ்டப்பட்டது எல்லாம் ஒரு வழியாக இந்த குருப்பெயர்ச்சியுடன் முடிவிற்கு வரும்.

தொழிலில் லாபம் அடைவீர்கள். இந்த குருப்பெயர்ச்சி காரணமாக நீங்கள் பணத்தின் அதிஸ்டசாலியாக காணப்படுகிறீர்கள். பணம் எந்த வழியிலாவது உங்களை தேடி வரும்.

கடகம்
நீங்கள் இதுவரைக்கும் உங்களது வேலைப்பிரச்சனைகளில் ஏராளமான சிக்கல்களை சந்தித்து இருப்பீர்கள். ஒரு கட்டத்தில் வேலை இல்லை என்ற அளவிற்கு சோதனைகள் வந்து சோந்து இருக்கும்.

குரு பெயாச்சியில் உங்கள் பக்கம் பார்க்கும் போது குரு 11 ம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு நிரந்தரமான வேலையும் வேலையின் மூலமாக லாபத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.

பண வரவு பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் கோடீஸ்வரராக வாழப்போகிறீர்கள்.

மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வீட்டில் பணம் இருக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கப்போகிறது.

விருட்சிகம்
நீங்கள் இதுவரையில் மற்றவர்கள் உங்களை புரிந்து காள்ளவில்லை என்ற ஆதங்கத்தில் வெறுத்துபோய் இருப்பீர்கள்.

ஆனால் இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் நீங்கள் இழந்த சந்தோஷங்களை மீளப்பெறப்போகிறீர்கள்.

இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையை புரிந்து கொள்வீர்கள். திருமண யோகம் கிடைக்கப்போகிறது இதனால் திருமணமாகதவர்களுக்கு திருமணமாகிவிடும்.

மனதிற்கு பிடித்த பல நல்ல காரியங்கள் நடக்கப் போகிறது. மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் உங்கள் வீட்டில் அரங்கேற போகிறது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் புத்திர பாக்கியம் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

சனி பகவான் உங்கள் ராசியில் அதிபதியாக உள்ளார். இதனால் உங்களுக்கு செல்வம் நிறைவாக கிடைக்கப்போகிறது. இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு ஒரு சுப ஆண்டாக அமையும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *