இந்த கேக் விலை என்ன தெரியுமா..! ஜஸ்ட் 3 கோடி தான்..!
பாலிவுட் சினிமா நட்சத்திரங்களில் ஊர்வசி ரவுடேலாவும் () ஒருவர். பல ஹிந்தி படங்களில் நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
ஹீரோயினாக மட்டும் இல்லாமல் படங்களில் ஸ்பெஷல் பாடல்கள் செய்து மிகவும் பிரபலமானார். கடந்த ஒரு வருடமாக தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.அவர் தமிழில் லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமான தி லெஜெண்ட் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் நடித்திருக்கும் ஒரே படம் அதுதான்.
இந்நிலையில் தற்போது ஊர்வசியின் பிறந்தநாள் கேக் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.சர்ச்சைக்கு காரணம் அவர் தனது பிறந்தநாளிற்கு 3 கோடி மதிப்பிலான 24 கேரட் தங்க மூலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டியுள்ளது தான்.
மேலும் இந்த கேக்கை ஊர்வசிக்கு பிரபல ராப் பாடகர் யோயோ ஹனி சிங் பரிசளித்ததாகவும் கூறப்படுகிறது.யோ யோ ஹனி சிங்குடன் நடிகை கேக் வெட்டும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஊர்வசி ரவுடேலா 25 பிப்ரவரி 1994 அன்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கோட்வாரில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே மாடலிங் செய்ய ஆரம்பித்து திரையுலகில் தடம் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது