Actor Vijay: ரஷ்யா செல்லும் GOAT படக்குழு.. தேர்தலையொட்டி விஜய்யின் மாஸ்டர் பிளான்
நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, ஸ்நேகா, லைலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் The greatest of all time.
இந்தப் படத்தை பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
படத்தில் அவரது கேங்கை சேர்ந்த வைபவ், பிரேம்ஜி ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தற்போது மீண்டும் சென்னையையொட்டிய பகுதிகளில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் என்ட்ரியை அறிவித்துள்ள நிலையல் அடுத்தாக தளபதி 69 படத்தை மட்டும் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக கூறியுள்ளார். இதனால் GOAT படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. அஜித்தின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்த படம் மங்காத்தா.
இதே போன்றதொரு படத்தை விஜய்க்கும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெங்கட்பிரபு எப்படி பூர்த்தி செய்வார் என்பதும் முக்கியமான கேள்வியாக பார்க்கப்படுகிறது.