3 கோடி ரூபாய் தங்க கேக்.. லெஜெண்ட் பட நடிகையின் பிறந்தநாள் புகைப்படங்கள்
மாடல் ஆக பல்வேறு பட்டங்கள் ஜெயித்து அதன் பின் ஹிந்தி சினிமாவில் நடிகையாக களமிறங்கி கிளாமரில் எல்லோரையும் கலங்கடித்து வருபவர் ஊர்வசி ரவுடேலா.
அவர் தமிழில் லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமான தி லெஜெண்ட் படத்தில் வில்லியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் நடித்திருக்கும் ஒரே படம் அதுதான்.
தங்க கேக்
ஊர்வசி ரவுடேலா இன்று அவரது 30வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவர் 24 கேரட் தங்கத்தால் ஆன கேக்கை வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
அந்த கேக்கின் மதிப்பு மூன்று கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஊர்வசி உடன் ராப் பாடகர் ஹனி சிங் இருக்கிறார்.