ரஜினிக்கு தங்கையா!! கால்ஷீட் இல்லை, பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை
சூப்பர் ஸ்டார் ரஜினி
ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்பது பல நடிகர், நடிகைகளின் கனவாக இருக்கிறது. ரஜினியின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த காரணத்தினால், நடிகை கீர்த்தி சுரேஷ் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டும் என கூறினார்.
அதே போல் சிவாஜி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ரஜினியுடன் நடனமாடினார் நடிகை நயன்தாரா. இதே போல் பலரும் ரஜினியின் படத்தில் நடிக்க வேண்டுமென பல விஷயங்களை செய்துள்ளனர். ஆனால், பிரபல நடிகை ஒருவர் ரஜினியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் நிராகரித்துள்ளார்.
வாய்ப்பை நிராகரித்த நடிகை
அவர் வேறு யாருமில்லை, புன்னகை அரசி நடிகை சினேகா தான். ஆம், நடிகை சினேகாவிற்கு, ரஜினியின் தங்கையாக கோச்சடையான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், அதன்பின் படப்பிடிப்பு தள்ளிபோய்க்கொண்டே இருந்ததனால், கால்ஷீட் இல்லை என்ற காரணத்தினால் இப்படத்தின் வாய்ப்பை நிராகரித்துள்ளார். அதன்பின், சினேகா நடிக்கவிருந்த ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் ஆனந்த தாண்டவம் பட நடிகை ருக்மிணி நடித்தார்.
இப்படத்தை ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.