போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் திடீர் ரத்து..!
வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லேசான காய்ச்சல் காரணமாக போப் பிரான்சிஸ் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது அன்றாட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிறிஸ்தவர்கள் ஆறுதல் அடைந்துள்ளதோடு விரைவில் உடல்நலம் பெற பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிசுக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.