இன்று பள்ளிகள் செயல்படுமா ? குழப்பத்தில் பெற்றோர்கள்..!
இடை நிலை ஆசிரியா்கள் சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் கடந்த 19-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.சம வேலைக்கு சம ஊதியம் தர வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 10 நாட்களாக அடையாளப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை இன்று முதல் தீவிரப்படுத்த உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறியதாவது:-
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இதுவரை சென்னையில் மட்டும் போராட்டம் நடத்தி வருகிறோம். முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். இன்று முதல் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.என்றார் இதனால் அரசுப் பள்ளிகள் செயல்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.