ஆன்லைனில் டிரை ஃப்ரூட்ஸ் ஆர்டர் செய்த பெண்… ரூ.3 லட்சத்தை இழந்தது இப்படித்தான்!
மகாராஷ்டிரா பன்வெல்லை சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், ஆன்லைனில் டிரை ஃப்ரூட்ஸ் ஆர்டர் செய்து 3 லட்சம் வரை இழந்திருக்கிறார்.
ஒரு லிங்க், ஒரு க்ளிக் என ஆன்லைன் மோசடிகள் கண்சிமிட்டும் நேரத்தில் நடந்து முடிகின்றன. மோசடி கும்பலின் பெரும்பாலான டார்கெட், வயதானவர்களை மையப்படுத்தியே இருக்கிறது.
மகாராஷ்டிரா பன்வெல் பகுதியைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், ஃபேஸ்புக்கில் செப்டம்பர் 20 அன்று டிரைஃப்ரூட்ஸ் குறித்து வந்த விளம்பரத்தைக் கண்டிருக்கிறார். ஆர்டர் போடுவோம் என 2,345 ரூபாய்க்கு டிரைஃப்ரூட்ஸை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
`எப்படி பேமென்ட் செய்வது எனத் தெரியவில்லை’ என அந்தப் பெண் கூற, அந்த நபர் ஒரு யுபிஐ மூலம் செயல்படும் ஆப்பில் பணம் அனுப்புதற்கான செயல்முறையைக் கூறியுள்ளார்.
அவர் சொல்லச் சொல்ல ஒவ்வொரு வழிமுறையையும் பின்பற்றியுள்ளார். பணப்பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தது எனக் கூறி அந்த நபர் அழைப்பைத் துண்டித்துள்ளார்.
அப்பெண்ணின் அக்கவுன்ட்டில் இருந்து 3,09,337 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது பிறகே தெரிந்தது. மீண்டும் அந்த நபரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, முடியாமல் போனது.
சைபர் கிரைம்வாங்காத கடனுக்கு மார்பிங் செய்த படத்தை அனுப்பி மிரட்டும் கும்பல் – சைபர் கிரைம் போலீஸில் புகார் தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்த அப்பெண் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.