நகை பிரியர்களுக்கு இன்ப செய்தி.! குறைந்தது தங்கத்தின் விலை.. ஒரு கிராமுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா.?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கத்திற்கு 10 ரூபாயும், ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.

நகையை விரும்பும் இந்திய மக்கள்

இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது ஆபரணங்களுக்காக மட்டும் இன்றி சேமிப்புக்காகவும் வாங்கி வருகிறார்கள், தங்கம் எப்போதும் சாமானிய மக்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும். அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்ய இந்திய மக்கள் பெரிதும் விரும்புவார்கள், தங்களது குழந்தைகளுக்கான சேமிப்பாக தங்கத்தில் அதிக அளவு முதலீட்டு செய்து வருகின்றனர்.

தங்கம் காக்கும் தேவதை

வீடுகளிலும் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது. தங்கத்தை ஆபரணங்களாக மட்டுமின்றி தங்க கட்டிகளாகவும் நாணயங்களாகவும் குறைந்த செய்கூலி சேதாரத்துடன் மக்கள் வாங்கி வருவதால் விலை உயரும்போது அவர்களுக்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறி, இறங்கும் தங்கத்தின் விலை

இந்தநிலையில், தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்தது குறிப்பாக கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி 5,780 ரூபாயாக தங்கத்தின் விலையானது இருந்தது. இந்த விலையானது படிப்படியாக உயர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி 5800 ரூபாயாக தொட்டது.

இந்த விலையானது மேலும் உயர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக 5, 820 என்ற விலையை தொட்ட நிலையில் இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது, அதாவது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5810 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலையனது 46 ஆயிரத்து 480 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *