புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகத்தை உறுதி செய்த எம்ஜி மோட்டார்
மின் வாகன சந்தையில் மூன்றாவது எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு வெளியிட எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. தற்பொழுது காமெட் EV மற்றும் ZS EV என இரு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.
சமீபத்தில் ஜேஎஸ்டபிள்யூ மற்றும் எம்ஜி மோட்டார் கூட்டணி அமைத்துள்ள நிலையில் சந்தையில் கூடுதலாக தனது மாடல்களை விரிவுப்படுத்த தயாராகியுள்ளது. 2030க்குள் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன விற்பனை 15%-20% சந்தை பங்களிப்பாக உயரக்கூடும் என எம்ஜி மோட்டார் தலைவர் உயரும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிறுவனம் எலக்ட்ரிக் காரின் நுட்பவிபரங்களை பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
MG Baojun Yep
சீன சந்தையில் வெளியிடப்பட்டுள்ள எம்ஜி மோட்டாரின் SAIC குழுமத்தின் Baojun Yep எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் அனேகமாக இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. Yep மாடல் ஆனது ஏற்கனவே சந்தையில் உள்ள காமெட் எலக்ட்ரிக் காரும் Global Small Electric Platform அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதாகும்.
5 கதவுகளை பெற்று பாக்ஸ் ஸ்டைல் டிசைன் பெற்று யப் எலெக்ட்ரிக் காரில் 101hp பவரை வெளிப்படுத்துகின்ற மாடலில் 28.1kWh LFP பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காரின் முழுமையான சிங்கிள் சார்ஜ் மூலம் 401 கிமீ ரேஞ்ச் வழங்கும் என CLTC சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் வேகம் மணிக்கு அதிகபட்சமாக 150 கிமீ ஆக உள்ளது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் பொழுது ரூ.10 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது டாடா பஞ்ச் இவி காருக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.