அம்பானியின் மருமகள் ராதிகா மெர்சன்ட் ஒரு பரதநாட்டிய கலைஞர்.. உங்களுக்கு தெரியுமா?
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமணத்துக்கு முந்தைய சடங்குகளில் இரண்டு குடும்பங்களும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், திருமணத்துக்கான ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. திருமணத்தை முன்னிட்டு வரும் மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்டின் “ப்ரீ வெட்டிங்” நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தான் ராதிகா மெர்சென்ட் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். கலை, பண்பாடு என இந்திய பாரம்பரியத்தை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கும் ரிலையன்ஸ் குழுமம் தான் ராதிகாவின் முதல் அரங்கேற்றத்தை நடத்தி வைத்தது.
ராதிகா மெர்சன்ட்டின் அற்புதமான நடனம் அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த அளவிற்கு அவரது நடன அசைவுகளும், பாவனைகளும் மிகவும் உணர்வு பூர்வமாய் இருந்தது. இதற்காக ராதிகா சுமார் 8 ஆண்டுகள் முறையாக பயிற்சி எடுத்து தனது முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.