இது நிஜமாவே ரொம்ப ஸ்பெஷல்… ராயன் படம் குறித்து அபர்ணா போட்ட போஸ்ட்!
பொங்கலையொட்டி தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த படம் உருவானபோது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. இருப்பினும் திரைக்கதை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
தனுஷின் 50 வது படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார். இதற்கு முன் ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்தார். ராயன் இயக்குநராக அவருக்கு இரண்டாவது படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராயன் உருவாகி வருகிறது.
இந்த கேங்ஸ்டர் படத்தில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். பொதுவாக படத்தின் பர்ஸ்ட் லுக்கில் நாயகனின் படத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். ராயனில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோரும் இடம்பெற்றிருக்கிறார்கள். இதனால், ராயனில் அவர்கள் முக்கியமான வேடங்களில் நடித்திருப்பதை யூகிக்க முடிகிறது.
இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.
இந்நிலையில் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார் என நேறைய அறிவிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மலையான நடிகையான அபர்ணா பாலமுரளி, தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ’8 தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ’சூரரைப் போற்று’ படத்தில் நடித்து பிரபலமானார்.
இந்த படத்தில் இணைந்தது குறித்து அபர்ணா பாலமுரளி வெளியிட்டுள்ள பதிவில், “ராயன் படத்தில் ஒரு அங்கமாக மாறுவதற்கு வாய்ப்பு கொடுத்த தனுஷுக்கு நன்றி. ஒரு ரசிகையாக உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய எனது கனவு நனவான தருணம் இது. நீங்கள் எங்களுடைய இன்ஸ்பிரேஷன். இது நிஜமாகவே ஸ்பெஷல்” என்று கூறியுள்ளார்.