கைநிறைய சம்பளம், அமெரிக்க வேலையை தூக்கியெறிந்துவிட்டு ஸ்னாக்ஸ் பிஸ்னஸை உருவாக்கிய அஹானா..!

ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்தவர் அஹானா, ஐஐடி பாம்பேயில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பின்னர் 2014 மற்றும் 2016 க்கு இடையில் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் தனது எம்பிஏ படிப்பை முடித்தார்.

அழகும் புத்திசாலித்தனமும் நிறைந்த இளம் பெண்ணான அஹானா கௌதம் அமெரிக்காவில் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடும்போது அதிக கொழுப்பு, கிரீம் நிறைந்த உணவுகளை பார்த்துப் பார்த்து சலித்துப் போய்விட்டார்.

தன் உடல்நலத்துக்கு ஏற்ற உணவுகள் கிடைக்காததை உணர்ந்து அவரே உணவுகளை தயாரித்து சாப்பிடத் தொடங்கினார். இதுதான் அவர் சத்தான உணவுப் பொருட்களைத் தயாரித்து தொழில் செய்வதற்கான அடிப்படையாக இருந்தது. இன்று சத்தான தின்பண்டங்களை தயாரித்து விற்கும் நிறுவனத்தை அஹானா நடத்தி வருகிறார்.

பொதுவாக வீட்டில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை செய்து சாப்பிடும் நாம் வெளியில் சென்றால் கண்ட பாஸ்ட் புட்களை சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்கிறோம். இதுவே நல்ல ஆரோக்கியமான தின்பண்டங்கள் கிடைத்தால் அதைத்தானே விரும்பிச் சாப்பிடுவோம். இதனால் அஹானாவின் தயாரிப்புகள் சீக்கிரமே மக்களுக்குப் பிடித்துப் போய்விட்டது.

இதற்காக அஹானா தொடங்கிய நிறுவனத்தின் பெயர் ஓபன் சீக்ரெட். பலரும் சத்தான உணவுகளை தயாரித்து விற்கின்றனர். ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் அஹானாவின் தயாரிப்புகள் மிகுந்த சுவையையும் ஊட்டச்சத்துகளையும் கொண்டிருந்ததால் வியாபாரம் சக்கைப் போடு போட்டது.

அஹானா கௌதம், ஓபன் சீக்ரெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. 30 வயதில், அவர் தனது சொந்த தொழிலைத் தொடங்கினார். அமெரிக்காவில் கைநிறைய சம்பளம் தந்த வேலையை உதறிவிட்டு சுயமாகத் தொழில் தொடங்கினார்.

அவரது ஓபன் சீக்ரெட் நிறுவனம் இப்போது ரூ.100 கோடி சம்பாதித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் அஹானா தொழிலைத் தொடங்குவதற்கான ஆரம்பப் பணத்தை அவரது தாயார் வழங்கியதாக கூறுகிறார்.

இதுதவிர அவர் கோத்ரேஜ் டைசன் ஃபுட்ஸ் லிமிடெட்டின் இன்டிபென்டன்ட் போர்டு டைரக்டராகவும் உள்ளார். அவர் நான்கு வருடங்கள் பிராக்டர் அண்டு கேம்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

அதன் பின்னர் ஜெனரல் மில்ஸில் பல்வேறு பதவிகளை வகித்தார். செயற்கை நிறங்கள், சுவைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்ற ஜங்க் புட்டில் இருந்து இந்திய மக்களை சத்தான ஆரோக்கியம் நிறைந்த பாரம்பரிய தின்பண்டங்களை நோக்கித் திருப்புவதே அஹானாவின் இலக்காக உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *