வீட்டுக்கு போங்க.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. ஸ்ரேயாஸை விட மோசம்.. சிக்கலில் மாட்டிவிட்ட பட்டிதர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் வீரர் ரஜத் பட்டிதர் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகியவர் ரஜத் பட்டிதர். முதல்தர கிரிக்கெட் மற்றும் இந்திய ஏ அணிக்காக சிறப்பாக விளையாடியது மற்றும் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் திறமைக்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அறிமுக போட்டியில் 32 மற்றும் 9 ரன்கள் எடுத்தாலும், இவரின் ஸ்டைல் நன்றாக இருப்பதாக பலரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆனால் 3வது டெஸ்ட் போட்டியில் எந்த அழுத்தமும் இல்லாத நேரத்தில் கூட ரஜத் பட்டிதர் 5 ரன்கள் மற்றும் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 4வது டெஸ்ட் போட்டியில் ரஜத் பட்டிதருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இளம் வீரர் என்பதால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனத்தை தவிர்த்து நம்பிக்கையூட்டினர். இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும், ரஜத் பட்டிதர் மீது நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினார். இருப்பினும் 2வது இன்னிங்ஸில் நம்பிக்கை வைத்து கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் 4வது வரிசையில் களமிறக்கினார். 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிய போது, 99 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதனால் ரஜத் பட்டிதர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. சொந்த மண்ணில் அடுத்தடுத்து 3 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பதே அரிதான விஷயமாக பார்க்கப்படும் சூழலில், 3 டெஸ்ட் போட்டிகளில் 2 முறை டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார் ரஜத் பட்டிதர். இதனால் ரஜத் பட்டிதரை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.