ராயுடுக்கு பதில் சிஎஸ்கே எடுத்த வீரர் இரட்டை சதம்.. 202 பந்தில் 253 ரன்கள்.. 10 சிக்சர், 24 பவுண்டரி

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் நிலையில் சிஎஸ்கே வீரர்கள் ஒவ்வொருவரும் செம பார்மில் இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இம்முறை சிஎஸ்கே அணி ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்து இருக்கிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த அம்பத்தி ராயுடு தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கு பதில் சமீர் ரிஸ்வி என்ற 20 வயதான வீரரை சிஎஸ்கே அணி தேர்வு செய்து இருக்கிறது.

சமீர் ரிஸ்வி அதிரடியாக விளையாடக்கூடிய வீரர் என உள்ளூர் கிரிக்கெட்டில் பெயர் பெற்றதால் அவரை சிஎஸ்கே தட்டி தூக்கியிருக்கிறது. இவரை வலது கை ரெய்னா என்று ரசிகர்கள் அழைப்பார்கள். இந்த நிலையில் 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான நான்கு நாள் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.சி.கே நாயுடு கோப்பை என்று அழைக்கப்படும் இந்த தொடரில் உத்தர பிரதேச அணியும் சௌராஷ்ட்ரா அணியும் பல பரிட்சை நடத்தின.

இதில் உத்தரபிரதேச அணிக்காக களம் இறங்கியுள்ள சமீர் ரிஸ்வி, அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். சௌராஷ்ட்ரா அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்த சமீர் ரிஸ்வி 86 பந்துகளில் சதத்தை கடந்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். அதன் பிறகும் சமீர் ரிஸ்வியும் நிறுத்தவில்லை. தொடர்ந்து பட்டையை கிளப்பினார்.

சமீர் ரிஸ்வியை கட்டுப்படுத்த முடியாமல் சௌராஷ்ட்ரா வீரர்கள் தடுமாறினர்.

இதனை அடுத்து 202 பந்துகளை எதிர்கொண்ட சமீர் ரிஷ்வி 253 ரன்கள் விளாசினார். இதில் 28 பவுண்டரிகளும் 10 இமாலய சிக்சர்களும் அடங்கும். சமிர் ரிஸ்வி தொடர்ந்து இன்னும் விளையாடி வருகிறார். இதனால் 300 ரன்களை அவர் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயுடுவுக்கு பதில் சமீர் ரிஸ்வியை 8 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி எடுத்தது.

20 வயது வீரருக்கு இவ்வளவு தொகையா என ரசிகர்கள் கேட்ட நிலையில் தன்னுடைய திறமையை தற்போது சமீர் ரிஷ்வி நிரூபித்து இருக்கிறார். இதனால் சமீர் ரிஸ்வியை முதல் போட்டியில் இருந்தே சிஎஸ்கே அணி வாய்ப்பு கொடுத்து அவருடைய திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே ருதுராஜ், ரச்சீன் ரவீந்திரா, ஷாயிக் , நித்து சிந்து போன்ற இளம் வீரர்கள் சிஎஸ்கேவில் உள்ளதால், அணியின் எதிர்காலமும் பிரகாசமாகி இருக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *