இளவரசர் வில்லியமுக்கு ஹரி மீது பொறாமை… வியப்புக்குள்ளாக்கியுள்ள தம்பியின் வெற்றி
இளவரசர் ஹரியின் வெற்றி வாழ்க்கை கண்டு அவரது அண்ணனான இளவரசர் வில்லியம் பொறாமைகொண்டுள்ளதாகவும், ஹரியால் எப்படி வெற்றிகரமாக செயல்படமுடிகிறது என அவர் வியப்புக்குள்ளாகியுள்ளதாகவும் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமாக செயல்படும் ஹரி
பிரித்தானிய இளவரசர் ஹரி, 2014ஆம் ஆண்டு, போரில் காயமடைந்த மற்றும் உடல் உறுப்புகளை இழந்த போர் வீரர்களுக்காக, இன்விக்டஸ் (Invictus Games) என்னும் விளையாட்டுப்போட்டிகளைத் துவக்கினார்.
விளையாட்டுப்போட்டிகளை துவக்குவதும், வெற்றிகரமாக நடத்துவதும் எளிதல்ல. அதற்கு ஏராளமான பணம் செலவாகும். அதற்கு பல நாடுகளின் அரசாங்கங்களிம் ஒத்துழைப்பு தேவை.
இளவரசர் வில்லியமுக்கு ஹரி மீது பொறாமை…
அப்படியிருக்கும் நிலையில், ஹரியால் எப்படி இந்த இன்விக்டஸ் விளையாட்டுகளை வெற்றிகரமாக நடத்த முடிகிறது, எப்படி அவ்வளவு பணம் திரட்டமுடிகிறது என்பதைக் குறித்து, அவரது அண்ணனான வில்லியமுக்கு சற்று பொறாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் Robert Jobson என்னும் ராஜ குடும்ப நிபுணர்.
ஹரியைப்பொருத்தவரை, விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான விடயங்களில், அவர் இளவரசராக இருக்கவேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை, அவர் ஹரியாக இருந்தாலே போதும் என்று கூறும் Robert Jobson, போர் வீரர்களுக்கான இன்விக்டஸ் போட்டிகள் என்பது, ஹரியின் கனவுத் திட்டம் என்றும், அதை அவர் மிகவும் வெற்றிகரமாக நடத்திவருகிறார் என்று கூறுகிறார்.