சென்னையில் பிறந்த இந்திய வம்சாவளி பொறியாளருக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளருக்கு அமெரிக்காவில் மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புகழ்பெற்ற கணினி பொறியியல் பேராசிரியர் அசோக் வீரராகவன், அமெரிக்காவில் உயரிய கல்வி விருதைப் பெற்றுள்ளார்.

டெக்சாஸின் மிக உயர்ந்த கல்வி விருதான ‘எடித் மற்றும் பீட்டர் ஓ’டோனல் விருது’ (Edith and Peter O’Donnell Award) பெற்றார்.

ஒவ்வொரு ஆண்டும், Texas Academy of Medicine, Engineering, Science and Technology (Tamest) அந்தந்த துறைகளில் சிறந்த ஆராய்ச்சி செய்தவர்களுக்கு இந்த விருதை வழங்குகிறது.

அசோக் வீரராகவனும் இந்த ஆண்டு பொறியியல் பிரிவில் தனது முயற்சிக்காக இந்த விருதைப் பெற்றுள்ளார்.

சென்னையில் பிறந்த இவர் தற்போது ஹூஸ்டனில் Rice University-யில் உள்ள George R. Brown School of Engineering-ல் கணினி பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

வீரராகவன் குழுவினர் இமேஜிங் தொழில்நுட்பத்தில் பல புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Imaging technology-யில் அவர் செய்த புரட்சிகரமான ஆராய்ச்சியைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வீரராகவன் இந்த விருது பெற்றதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

கடந்த தசாப்தத்தில் பல மாணவர்கள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டேஷனல் இமேஜிங் ஆய்வகத்தில் செய்த அற்புதமான மற்றும் புதுமையான ஆராய்ச்சிக்கான அங்கீகாரமாக இது அமைந்துள்ளது.

தற்போதைய இமேஜிங் தொழில்நுட்பத்தில் பல சிக்கல்கள் இருப்பதாக அவர் கூறினார்.

ஒளி பரவுவதைத் தடுக்கும் தடைகள் இருக்கும் இடத்தில் நமக்குத் தேவையானதை நம்மால் பார்க்க முடியாது. இதனை முறியடிக்க தாங்கள் மேற்கொண்ட பெரும்பாலான ஆய்வுகளில் தீர்வு கிடைத்துள்ளதாக அவர் விளக்கினார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *