சீனியர்கள் போய்ட்டாங்க! இனி ஜூனியர்கள் தான் இருப்பாங்க அதிருப்தியை வெளிப்படுத்திய ரோகித் சர்மா

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டி எஞ்சிய நிலையில் மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்கள் பலரும் விளையாடாமல் வெளியேறிய நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இளம் வீரர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி இருக்கிறார்.

இந்த நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா சீனியர் வீரர்கள் குறித்து வெளிப்படையாக அதிருப்தியை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், இந்த தொடர் கடும் சவாலாக இருந்தது. நாங்களும் போராடி தான் இந்த தொடரை வென்றோம். தற்போது வெற்றியாளராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எங்கள் அணி வீரர்கள் ஒவ்வொருவரையும் நினைத்து நான் பெருமை கொள்கிறேன். இந்த தொடரின் போது எங்கள் நோக்கி பல சவால்கள் எறியப்பட்டது. ஆனால் அதனை எல்லாம் நாங்கள் சிறப்பாக எதிர் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் பலவிதமான சவால்களை சந்தித்தோம். இந்த தொடரில் எங்களுக்கு என்ன தேவையோ அதனை நோக்கி கவனம் சிதற விடாமல் அடைந்தோம்.

களத்தில் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தோமோ அதனை சரியாக செய்திருக்கிறோம். இந்த இளைஞர்கள் எல்லாம் சர்வதேச போட்டியில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக அவர்கள் கடும் உழைப்பை செலுத்தி இருக்கிறார்கள். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அங்கு தங்களுடைய திறமையை நிரூபித்து தற்போது சர்வதேச தரத்திற்கு வந்திருக்கிறார்கள்.

அவர்களிடம் நான் பேசும்போது எல்லாம் அவர்கள் கூறும் பதில்கள் அவருடைய எண்ண ஓட்டங்கள் எனக்கு உற்சாகத்தை அளித்தது. இந்த இளம் வீரர்களுக்கு ஏற்ற வகையில் அணியின் சூழலை நாங்கள் மாற்ற விரும்பினோம். உங்களுடைய பணி என்ன என்று அவர்களிடம் நாம் ஞாபகப்படுத்த தேவையே இல்லை. இளம் வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது சரியாக தெரிகிறது.

இன்றைய ஆட்டத்தில் கூட துருவ் ஜூரல், முதலில் 90 ரன்கள் சேர்த்தது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் அருகே வரை நாங்கள் வந்தோம். கில் மற்றும் துருவ் ஜூரல் இருவரும் இணைந்து முதிர்ச்சியுடன் விளையாடினார்கள். எப்போதுமே சீனியர் வீரர்கள் மற்றும் அணியின் முக்கியமான வீரர்கள் தொடரில் இல்லாமல் போனால் அது எப்போதுமே விரும்பத்தக்க விசயமாக இருக்காது.

(கோலி போன்ற) வீரர்கள் எல்லாம் எந்த சூழலிலும் தங்களுடைய திறமையை நிரூபிப்பவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய இடத்தை நிரப்புவது என்பது இந்த இளம் வீரர்களுக்கு சுலபமான காரியம் கிடையாது. எங்களுக்கு வெளியில் இருந்து கடும் அழுத்தம் இருந்தது. ஆனால் அணிக்குள்ளே அப்படி எதுவும் இல்லை. ஆனால் இந்த சூழலில் எல்லாம் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

அவர்கள் இனி இங்கே தான் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள் எல்லாம் ஒரு கிரிக்கெட் வீரராக அவர்களுக்கு உந்துகோலை கொடுக்கும். இதன் மூலம் இனிவரும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள அவர்கள் தயாராக இருப்பார்கள். நாங்கள் அனைத்து டெஸ்ட் போட்டியிலுமே வெற்றி பெற வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். இந்த தொடர் நன்றாக அமைந்தது. எனினும் தர்மசாலாவிலும் நாங்கள் வெற்றியை பெறவே போராடுவோம்.

இந்த இளம் வீரர்கள் எல்லாம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை விளையாடி இருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது இந்த சூழலை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது திறனை காட்டுகிறார்கள். தர்மசாலாவிலும் நாங்கள் கடைசி மூன்று டெஸ்டில் எப்படி விளையாடினோமோ, அதே போல் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *