WTC புள்ளி பட்டியல் – ஹாட்ரிக் வெற்றியால் உயர்ந்த இந்தியா.. ஆஸி.க்கு ஆப்பு.. முதல் இடம் யாருக்கு?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த மூன்று போட்டிகளை வென்று ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியை வரும் மார்ச் 7-ஆம் தேதி எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து பெற்ற வெற்றியால் உலக டெஸ்ட் புள்ளி சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியாவின் புள்ளிகள் எகிறி இருக்கிறது. அதேசமயம் இவ்வளவு உயர்ந்தும் இந்தியாவுக்கு முதலிடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் எந்த அணி எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி ஒன்று தோல்வி என 75 சதவீத புள்ளிகள் உடன் நியூசிலாந்து அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி இரண்டு தோல்வி ஒரு சமன் என 64.58 புள்ளி சதவீதங்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 10 போட்டிகளில் விளையாடி ஆறில் வெற்றி மூன்றில் தோல்வி ஒரு சமன் என 55. சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
வங்கதேச அணி 50 சதவீத புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் ,பாகிஸ்தான அணி 36.6 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 33 சதவீதத்துடன் ஆறாவது இடத்திலும் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி 25 புள்ளி சதவீதத்துடன் ஏழாவது இடத்திலும், இங்கிலாந்து அணி 19.4 சதவீதத்துடன் எட்டாவது இடத்திலும், இலங்கை அணி எந்தப் புள்ளிகளுமே பெறாமல் ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றால் புள்ளி சதவீதம் மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது. முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.