இஷான் கிஷன், ஸ்ரேயாஸ்-க்கெல்லாம் ஒரே அடி.. மானத்தை வாங்கிய ரோகித் சர்மா.. பச்சையா சொல்லிட்டாரே

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பல சவால்களை எதிர்கொண்டு தற்போது வெற்றி பெற்று இருக்கிறது. இந்தத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது காயம் ஏற்பட்டு விட்டதாக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து விலகினார்.

ஆனால் அவருடைய உடல் தகுதி 100% இருப்பதாக என் சி ஏ அதிகாரிகள் கூறிய நிலையில் அவர் ஐ பி எல் தொடருக்கு பயிற்சி செய்வதற்காக இப்படி ஒரு பொய்யை சொன்னார் என்று தெளிவானது. இதேபோன்று இஷான் கிஷன் பிரச்சனை தான் மேலோங்கி இருந்தது.

மனசோர்வு ஏற்பட்டதாக கூறி இந்திய அணியில் இருந்து விலகிய இசான் கிஷன் இங்கிலாந்து போன்ற முக்கிய தொடருக்கு கூட வராமல் ஐபிஎல் தொடருக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதனால் அவருக்கு கடும் எச்சரிக்கையை பிசிசிஐ வழங்கியிருந்தது. இந்த நிலையில் ரோகித் சர்மாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் சென்ற இரண்டு வீரர்களை பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சாடினார். இதுகுறித்து பேசிய அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற வெறி இல்லாதவர்களை பார்க்கும்போது அவர்களை விளையாட வைத்து என்ன பயன் என்று தான் தோன்றுகிறது எனக் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பேசிய அவர், டெஸ்ட் கிரிக்கெட் என்பது மிகவும் கடினமான ஒரு விளையாட்டு. அந்த தொடரில் நீங்கள் சாதிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு வெறி இருக்க வேண்டும். எந்த வீரருக்கு அந்த வெறி இருக்கிறது? எந்த வீரரிடம் அது இல்லை என்பதை நாம் பார்த்த உடனே கண்டுபிடித்து விடலாம். எந்த வீரருக்கு டெஸ்டில் ஜொலிக்க வேண்டும் என்ற வெறி மற்றும் எண்ணம் இருக்கிறதோ அவர்களை வைத்து மட்டுமே நாங்கள் விளையாடுவோம்.

ஏனென்றால் இந்த வகை கிரிக்கெட்டில் நீங்கள் கடும் உழைப்பை மேற்கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சொந்த மண்ணில் வெற்றி பெற்றால் அதைப் பற்றி யாருமே அதிகம் பேச மாட்டார்கள். அதேசமயம் நாங்கள் சொந்த மண்ணில் தோல்வியை தழுவினால் என்ன நடக்கும் என்று எனக்கு கண்டிப்பாக தெரியும். டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது தான் முக்கியமே தவிர, எங்கு விளையாடினோம்? யாருடன் விளையாடினோம்? என்பது முக்கியமில்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *