வெளிநாடொன்றில் தேவாலயத்துக்குள் துப்பாக்கிச்சூடு – 15 பேர் உயிரிழப்பு
நைஜீரிய இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் பர்கினோ – பாசோ கிராமத்தில் கத்தோலிக்க தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸார் விசாரணை
தேவாலய பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றிருந்த நிலையில், திடீரென துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் தேவாலயத்திற்குள் நுழைந்துள்ளது.
இதன்போது பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக கூறப்படுகிறது.