வெள்ளை முடியை வேரோடு நீக்க ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் போதும்..!
பொதுவாகவே சிகை அலங்காரம், உடல் நிறம் மற்றும் முடியின் நீளம் ஆகியவை தற்போதைய சமூகத்தில் இருக்கும் ஆண் பெண் இருபாலருக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
முடி நரைப்பது என்பது மனித வயதின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அது தவிர ஊட்டச்சத்து குறைபாடு காரணத்தினாலும் இது ஏற்படலாம்.
ஆகவே உணவு பழக்க வழக்கத்தில் சில மாற்றங்களை நடத்துவதன் மூலமும் நரை முடியை கருப்பாக மாற்றலாம்.
வெள்ளையர்களுக்கு 20 வயதுக்கு பின்னரும், ஆப்பிரிக்கர்களில் 30 வயதுக்கு பின்னரும், ஆசியர்களில் 25 வயதுக்கு பின்னரும் முடி நரைப்பது ஆரம்பமாகிறது.
இவ்வாறு உங்களது தலை முடியானது நரைத்து விட்டது என்றால் உடனே நீங்கள் இயற்கை முறையை தேர்ந்தெடுப்பது சிறந்த தேர்வாகும்.
அந்தவகையில் இயற்கையான முறையில் எப்படி நரை முடியை கருப்பாக மாற்றலாம் என பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் + மருதாணி
மருதாணி இலைகளை வெயிலில் உலர்த்து எடுத்து, தேங்காய் எண்ணெயில் மருதாணி இலைகளை சேர்த்து நிறம் மாறும் வரையில் சூடுப்படுத்தி எடுக்க வேண்டும். பின் எண்ணெய் சூடானது குறைந்தவுடன் இதை தலைமுடிக்க பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய் + நெல்லிக்காய்
ஒரு பாத்திரத்தில் 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் 2 முதல் 3 தேக்கரண்டி நெல்லிக்காய் தூள் சேர்த்து சூடாக்க வேண்டும்.
பின் இது பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் உச்சந்தலை மற்றும் கூந்தல் முழுவதும் பூச வேண்டும். சில மணி நேரம் வைத்து தண்ணீரில் கழுவினால் நரை முடி கருமையாகும்.