Coffee Face Mask: தங்கம் போல் முகம் ஜொலிக்கணுமா? வீட்டிலேயே செய்யலாம்
உடலுக்கு மட்டுமின்றி நம் சருமத்திற்கும் காபி புத்துணர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பலரும் முகத்தில் Coffee Mask பயன்படுத்துவர்.
காபியில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இதனால் முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறுகிறது.
தற்போது கொரியன் உணவு, கொரியன் டிவி சீரிஸ் மற்றும் கொரியன் மியூசிக் கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அந்த வகையில் கொரியன் அழகு குறிப்புகளும் ஒரு பக்கம் பிரபலமாகி வருகிறது.
கொரியன் பெண்களின் அழகு பராமரிப்பு முறையில் இந்த Korean Face Mask அதிக நன்மை தருகிறது. இதனை எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
காபி தூள்- 2 ஸ்பூன்
நாட்டு சர்க்கரை- 1 ஸ்பூன்
தேன்- 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
லாவெண்டர் எண்ணெய்- சில துளிகள்
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் காபித்தூள், நாட்டுச் சர்க்கரை, தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் எடுத்துக் கொள்ளவும்.
இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று நன்றாக சேரும் வரை கலக்கவும்.
இது முகத்தில் தடவும் பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இப்போது நறுமணத்திற்காக லாவெண்டர் எண்ணெய் சேர்க்கலாம்.
பயன்படுத்தும் முறை
முதலில் முகத்தை நன்றாக Face Wash பயன்படுத்தி கழுவ வேண்டும். பிறகு ஒரு துண்டால் முகத்தில் உள்ள ஈரத்தை துடைத்து எடுக்கவும்.
அடுத்து செய்துவைத்த Korean Face Maskகை கண் பகுதியில் மட்டும் தவிர்த்து முகம் முழுவதும் பூசவும். பிறகு முகத்தில் சில நொடிகளுக்கு மென்மையாக மசாஜ் செய்யவும்.
10 – 15 நிமிடங்கள் வரை காய விட்டு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
இரவு தூங்குவதற்கு முன்பு பயன்படுத்தலாம், இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் முகம் மென்மையாகி தங்கம் போல ஜொலிக்கும்.