கையும் களவுமாக மாட்டிக்கொண்ட கோபி.. இந்த நேரத்திலும் போட்ட பெரிய டிராமா
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என பார்க்கலாம். பாக்யா வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி கையில் கட்டுடன் வருவதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகின்றனர். அதன் பின் பாக்யாவின் மாமியார் பாக்யாவை திட்ட தொடங்கிவிடுகிறார்.
செழியனை விட்டுவிட்டு மருமகள் ஜெனி சென்றுவிட்ட நிலையில் அவர்கள் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டினார்களோ, அவங்க இஷ்டத்துக்கு கிறிஸ்டியன் பெயர் வைத்துவிட்டு இருப்பார்கள் என திட்டுகிறார்.
அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை, ஜெனி எனக்கு வாய்ஸ் நோட் அனுப்பி இருந்தாள் என பாக்யா சொல்ல எல்லோரும் மகிழ்ச்சி ஆகிறார்கள்.
மாட்டிய பிறகும் டிராமா போட்ட கோபி
வழக்கம்போல கோபி தனது ஆபிஸை மூடிவிட்டதை மறைத்து ஹோட்டலில் சென்று அமர்ந்துகொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ராதிகா ‘நான் உங்க ஆபிசுக்கு தான் வந்துகொண்டிருக்கிறேன்’ என சொல்ல, கோபி தலைதெரிக்க ஓடி சென்று ராதிகாவை தடுக்கிறார்.
ஆபிஸ் வேண்டாம், ஹோட்டலில் சாப்பிட போகலாம் என சொல்லி நீங்க நேரம் சமாளிக்கிறார். அதன் பின் ஹோட்டலில் இருந்து கிளம்பியதும் ராதிகாவுக்கு சந்தேகம் வருகிறது. அதனால் கோபி ஆபிசுக்கே சென்று பார்க்கிறார்.
அந்த ஆபிஸ் சில வாரங்களுக்கு முன்பே மூடிவிட்டார்கள் என அருகில் இருந்த ஒருவர் சொல்கிறார். அதன் பின் ராதிகா கடும் கோபத்தில் இருக்க, அவரது அலுவலகத்தில் இருந்து அவசர அழைப்பு ஒன்று வருகிறது.
அதனால் கிளம்பி செல்கிறார். ராதிகா கடும் கோபத்தில் கோபி சொன்ன பொய்கள் எல்லாவற்றையும் யோசித்து கொண்டிருக்க கோபி போன் செய்கிறார்.
அவர் ரொமான்டிக் ஆக பேச, சாயங்காலம் இருக்கு உங்களுக்கு கச்சேரி என்பது போல ராதிகா கோபத்தில் இருந்தாலும், அதை மறைத்து பேசுகிறார். அப்போதும் கோபி தான் மாட்டிக்கொண்டது தெரியாமல் டிராமா போட்டுக்கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.