Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 27, 2024 – செவ்வாய்க்கிழமை
மேஷம்:
கற்பனையான பேச்சுக்கள் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தலாம். எதார்த்தமான உரையாடல் மீது கவனம் செலுத்தவும். பணியிடத்தில் பிறர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டாம். உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் நிலையானதாக இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். லேசான தலைவலி ஏற்படலாம்.
ரிஷபம்:
மனதில் நிறைய விஷயங்களைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தால் வெறுப்பு ஏற்படும். பலமான அடித்தளத்தை கட்டமைக்க உரையாடல் மிக அவசியமாகும். புதிய வாய்ப்புகளை தேடிக் கொள்ளுங்கள். தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடுகளுக்கு பலன் கிடைக்கும். வங்கிச் சேவைகளால் ஸ்ட்ரெஸ் ஏற்படும்.
மிதுனம்:
ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு திருமண வாய்ப்பு நெருங்கி வருகிறது. மன உறுதியுடனும், கவனத்துடனும் செயல்பட்டு வந்தால் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் செலவினங்களை குறைத்துக் கொள்ளுங்கள். முதலீடுகளை சாதுர்யமாக திட்டமிட்டு செய்யவும்.
கடகம்:
இதுவரை காதல் ஏற்படாத நபர்களுக்கு இப்போது அது கை கூடி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. தற்போதைய பணி பிடிக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கலாம். உங்களுக்கான நிதிச்சுமை அதிகரிக்க இருக்கிறது.
சிம்மம்:
உங்கள் காதல் உறவில் மகிழ்ச்சி நீடிக்கும் மற்றும் உறவு பலப்படும். பணியிடத்தில் தனித்து வேலை செய்ய வேண்டாம். பிறரை குறைத்து மதிப்பிடுவதால் வாய்ப்புகளை தவறவிட நேரிடும். சக ஊழியர்களின் கருத்தை கேட்டு நடந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்.
கன்னி:
உங்கள் மனம் மிகுதியாக புண்படலாம். உங்கள் பணி சார்ந்து நீங்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். செலவுகளில் கவனமின்றி இருக்க கூடாது. பணம் சம்பாதிக்கும் திறன் உங்களுக்கு இருந்தாலும், சிலருடைய தூண்டுதல்களில் விழுந்துவிட வேண்டாம். நிதி சார்ந்த முடிவுகள் சாதுரியமாக இருக்க வேண்டும்.
துலாம்:
உங்கள் பணி சார்ந்து நீங்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஏனியில் ஏற வேண்டும் என்றால் கடின உழைப்பும், ஈடுபாடும் அவசியமாகும். உங்களுக்கு மாப்பெரும் பணவரவு காத்திருக்கிறது. உங்கள் இலக்குகளை நோக்கி கவனம் சிதறாமல் பணி செய்யவும். புதிய இடங்களுக்குப் பயணம் செய்வீர்கள்.
விருச்சிகம்:
நீங்கள் கட்டாயப்படுத்தினால் உங்கள் காதல் தோல்வியில் முடியலாம். காதல் என்பது இயல்பானதாக இருக்க வேண்டும். போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பணம் சார்ந்த விஷயங்களில் யதார்த்த அறிவு அவசியமாகும். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து லாபம் பெறலாம்.
தனுசு:
காதலில் கடந்த கால கசப்புகளை மறந்து புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்க வேண்டும். உங்கள் பணி சார்ந்து மகிழ்ச்சியான ஆச்சரியம் காத்திருக்கிறது. உங்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கலாம் அல்லது புதிய நபர் உங்கள் குழுவில் இணையலாம்.
மகரம்:
ஒரு புதிய நபர் உங்கள் வாழ்வில் வர இருக்கிறார். அவர் மூலமாக குதூகலம் நடைபெறும். காதலில் புதிய அனுபவங்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கவும். சக ஊழியர்களின் அதிகார வெறி குறித்து கவனமாக இருங்கள். முந்தைய முதலீடுகள் உங்களுக்கு வளர்ச்சியை கொடுக்கும்.
கும்பம்:
காதலில் பழைய நினைவுகள் துளிர் விடும். உங்கள் பணி சார்ந்து இப்போது பிரச்சினைகள் ஏற்படலாம். ஆகவே பொறுமை அவசியம். உங்களுக்கு சோர்வு ஏற்படலாம். ஆனால் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். உங்கள் உடல் நலன் குறித்து அக்கறை கொள்ளுங்கள்.
மீனம்:
உங்கள் பணி சார்ந்து ஆச்சரியமான தருணங்கள் வர இருக்கின்றன. மாணவர்கள் தங்கள் திட்டங்களை மாற்ற நேரிடும். புதிய வாய்ப்புகளை தேடிக் கொள்ளுங்கள். உங்களுக்கு சேமிப்பு அல்லது சொத்து இருந்தாலும் உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.