ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி… பக்தர்கள் உற்சாகம் !
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா விமரிசையாக நடத்தப்பட்டது.
உலகம் முழுவதும் பெரும் கவன ஈர்ப்பை இந்த கோவில் விழா கொண்டுவந்தது. அதே போல் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பிறகு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது முதல் இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி மூடப்பட்டு வழிபாடும் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் தான் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகவும் இந்துக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.