ஆதியோகி திருவுருவம் 112 அடியில் அமைக்கப்பட்டிருப்பதன் பின்னனி என்ன?

மிழகத்தில் கோவை மாவட்டத்தில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அழகும் ஆன்மீகமும் சங்கமிக்கும் இடத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறார் ஆதியோகி.

கோவையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக ஆதியோகியின் திருவுருவம் மாறியுள்ளது.

ஆதியோகியை தரிசிக்கும் பலருக்கும் எழும் கேள்வி, யார் இந்த ஆதியோகி? என்பது தான். தோராயமாக 15,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் மதம் என்ற ஒரு கட்டமைப்போ, கருத்தியலோ இல்லாத காலத்தில் இமயமலையில் வாழ்ந்தவர் ஆதியோகி.

இந்து கலாச்சாரத்தில் சிவனாக வணங்கப்படும் இவர் யோக கலாச்சாரத்தில் முதல் யோகி அதாவது ‘ஆதியோகி’ என அழைக்கப்படுகிறார். அகத்தியர் உள்ளிட்ட 7 சப்த ரிஷிகள் மூலம் யோக அறிவியலை உலகிற்கு முதன் முதலாக வழங்கியவர். அவர் இவ்வுலகிற்கு உணர்த்த விரும்பிய செய்தி ஒன்றுதான் ‘உள்நோக்கி செல்வதே முக்தி பெறுவதற்கான ஒரே வழி’

இந்த அடிப்படையில், ஈஷா யோக மையத்தில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறார் ஆதியோகி. ஆதியோகியின் திருவுருவம் 34 மீட்டர் உயரம் கொண்டது. அதாவது 112 அடி, 147 அடி நீளம் மற்றும் 82 அடி அகலமும் கொண்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *