ஹோட்டல் ரூம்களில் பெட்ஷீட் , தலையணை வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்க என்ன காரணம் தெரியுமா..?
எங்கேனும் பயணம் செல்லும் போதோ அல்லது சுற்றுலா செல்லும்போது ஹோட்டல் அறைகள் தான் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக வீடு போன்று உள்ளது. விருந்தினர்களின் வசதிக்கேற்ப தொலைக்காட்சி பெட்டிகள் முதல் ஏசி கட்டர்கள் என அனைத்தும் விருந்தினர்களின் வசதிக்கேற்ப விதவிதமாக அமைக்கப்பட்டு இருக்கும். இது ஒவ்வொரு ஹோட்டலுக்கும் மாறுபடலாம்.
முக்கியமாக அந்த அறைகளின் சுவர் வண்ணங்கள், அங்கு பயன்படுத்தப்படும் போட்களின் வண்ணங்களின் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால் அனைத்து ஹோட்டல்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கும். அதாவது நீங்கள் எந்த ஹோட்டல் இருக்கு தங்க சென்றாலும் அங்குள்ள படுக்கை விரிப்புகள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். இது ஏன் என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?
இதற்கு காரணம் ஹோட்டல் அருகில் உள்ள படுக்கை விரிப்புகளை சலவை செய்யும்போது ஒட்டுமொத்த படுக்கை விரிப்புகளையும் ஒன்றாக சேர்த்து சலவை செய்வார்கள். அந்த சமயங்களில் படுக்கை விரிப்புகள் விதவிதமான நிறங்களில் இருந்தால், எதில் அழுக்கு அதிகமாக உள்ளது, எந்தெந்த இடத்தில் கறை படிந்துள்ளது என்பதை கண்டறிவதற்கு சிரமமாக இருக்கும். இதுவே வெள்ளை நிறத்தில் படுக்கை விரிப்புகள் இருக்கும் பட்சத்தில் கரை இருக்கும் இடங்களை எளிதில் கண்டறிந்து சலவை செய்வதற்கு வசதியாக இருக்கும். அதே நேரத்தில் சில வேதிப்பொருட்களை பயன்படுத்தி சலவை செய்தாலும் வெள்ளை நிற படுக்கை விரிப்புகள் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
இதைத் தவிர வெள்ளை நிற படுக்கை விரிப்புகள் ஆனது மற்ற அனைத்து நிறங்களுடனும் சரியாக பொருந்தி விடும் தன்மை உடையது. இதனால் ஹோட்டல் அறையின் உட்புறத்தில் உள்ள பொருட்கள் மற்றும் சுவரின் வண்ணங்கள் ஆகியவை விதவிதமான நிறங்களுடன் இருந்தாலும், இந்த வெள்ளை நிற படுக்கை விரிப்புகளானது தன்னந்தனியாக தெரியாது. பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருக்கும்.
இதில் இன்னும் ஒரு முக்கியமான விஷயமும் உள்ளது. 90-களின் துவக்கம் முதல் இந்த வெள்ளை நிற படுக்கை விரிப்புகள் அவ்வளவாக வழக்கத்தில் இல்லை. 1990க்கு பிறகு இன்டீரியர் டிசைனர்களின் அறிவுரைப்படி ஹோட்டல் அறைகளில் வெள்ளை நிற படுக்கை விரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்பத்தில் சில ஓட்டல்களில் மட்டும் பயன்படுத்தப்பட்ட இந்த முறை பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து ஓட்டல்களிலும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.
இதைத்தவிர தற்போது 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களில் விருந்தாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் தங்கும் அறைகளை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விருந்தினர்கள் தாங்கள் விரும்பிய வண்ணங்களில் படுக்கை விரிப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.