பாஜவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு; தமாகா தலைமை நிலைய செயலாளர் கட்சியிலிருந்து அதிரடியாக விலகினார்: வாசனுக்கு பரபரப்பு கடிதம்
பாஜவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா தலைமை நிலைய செயலாளர் டி.என்.அசோகன் கட்சியில் இருந்து அதிரடியாக வெளியேறினார்.
அவர் ஜி.கே.வாசனுக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன், தமாகா கூட்டணி அமைப்பதாக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜி.கே.வாசன் நேற்று அறிவித்தார்.
பாஜ கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது. பாஜவுடன் தமாகா கூட்டணி அமைத்ததற்கு காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். பாஜவுடன் கூட்டணி வைத்ததால் மூப்பனாரின் ஆன்மா ஜி.கே.
வாசனை மன்னிக்காது என்று காட்டமாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பாஜவுடன் கூட்டணி அமைத்ததற்கு தமாகாவுக்கு உள்ளேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தமாகாவின் தலைமை நிலைய செயலாளர் டி.கே.அசோகன், ஜி.கே.வாசனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகாவில் இருந்து வெளியேறி உள்ளார்.இதுதொடர்பாக தமாகா தலைமை நிலைய செயலாளர் டி.கே.