பூமி பூஜைக்கு வராதீர்.!! வராதீர்.!! நாமக்கல்லை கலக்கும் திமுகவினர் போஸ்டர்.!!
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளன அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, கூட்டணி தொகுதி பங்கீடு, தேர்தல் களப்பணியில் முமரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் புதுக் கோம்பை கிராமம் முத்துக்காப்பட்டி ஊராட்சியில் மேதராமதேவி பகுதியில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை போடுவதற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பூமி பூஜையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் மேதனமாதேவி சாலைக்கு பூமி பூஜை போடுவதற்கு வராதீர்கள் என திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளே போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் மேதரமாதேவி சாலைக்கு பூமி பூஜை போடுவதற்கு வராதீர்! வராதீர்!
திமுக மாநிலங்களவை உறுப்பினர் அவர்களே வராதீர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அவர்களை வராதீர் மாதேவி திமுக கிளைச் செயலாளர்கள் சதி வேலையில்