ஏன் தெரியுமா ? நமது வீடுகளில் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள்
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ”வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும்.
கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.செம்பு குடம் இலலைனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும்.
அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டுத் திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வைத்துக் குடிக்கிறார்கள்.
உங்கள் உடலில் செம்பின் குறைபாடு இருந்தால், நீங்கள் இந்த செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள செம்பு குறைபாடு நீங்கும்.
செம்பு நம் உடலில் இருக்கும், பாக்டீரியா போன்ற கிருமிகளுக்கு முற்று புள்ளி வைக்கும். அதாவது நாம் செம்பு பாத்திரத்தில் வைக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்கும். சாதாரண தண்ணீருக்கு வயிற்று போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை உண்டாக்கும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் சக்தி கிடையாது. ஆனால் செம்பு தண்ணீருக்கு கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தி உண்டு.
செம்பு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை குடிப்பதால் வயிற்று பிரச்சனைகள் தீர்ந்து விடும். உங்களுக்கு வாய்வு வலி, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகள் இருந்தால் அவற்றை சீராக்கும். இதற்காக தினமும் காலை செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரை நீங்கள் குடிக்க வேண்டும். இந்த தண்ணீர் உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும். உங்களை அனைத்து விதமான