டீ காபியில் சர்க்கரைக்கு பதில் உப்பு போட்டு குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
டீ காபியில் சர்க்கரைக்கு பதில் உப்பு போட்டு குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
நம் அன்றாட வாழ்க்கையில் டீ, காபி குடிக்கும் பழக்கம் அதிகரித்து விட்டது.
டீ அல்லது காபி இல்லாமல் அந்த நாள் பொழுதை கழிப்பது என்பது பலருக்கும் எளிதற்ற ஒன்றாக மாறிவிட்டது. பாலில் தேயிலை தூள் அல்லது காபி தூள் போட்டு சுவைக்காக சர்க்கரை சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் தேவாமிர்தம் போல் இருக்கும்.
ஆனால் டீ காபியில் சர்க்கரை பதில் உப்பு சேர்த்து குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
உப்பு சேர்த்த டீ, காபி குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-
*உடல் சோர்வை போக்கும் ஆற்றல் உப்பு டீ, உப்பு காபிக்கு இருக்கிறது.
*உடலுக்கு போதிய எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
*இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவுகிறது.
*நரம்பியல் குறைபாட்டை நீக்கி நரம்பு வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
*செரிமான கோளாறை நீக்கி செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.