நரை முடி அதிகமாக இருக்கின்றதா? அதை கருப்பாக்க இந்த மூன்று பொருட்கள் போதும்
நரை முடி அதிகமாக இருக்கின்றதா? அதை கருப்பாக்க இந்த மூன்று பொருட்கள் போதும்!
நம்முடைய தலையில் உள்ள நரைமுடியை இயற்கையாக கிடைக்கும் வெறும் மூன்று பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு கருப்பாக மாற்றுவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம்மில் சிலருக்கு நரை முடி என்பது அதிகமாக இருக்கும். அவ்வாறு தலைமுடி அதிகமாக இருக்கும் நபர்கள் அதை கருப்பாக மாற்றுவதற்கு செயற்கையாக கிடைக்கும் ஹேர் டை பயன்படுத்துவார்கள். இதனால் முடிக்கும் நம்முடைய தலைக்கும் அதிக பாதிப்புகள் ஏற்படும். எனவே இந்த பதிவில் இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக மாற்றுவது குறித்து பார்க்கலாம்.
தேவையான மூன்று பொருட்கள்…
செம்பருத்தி பூ
காய வைத்த நெல்லிக்காய்
அவுரி விதை
செய்முறை…
முதலில் செம்பருத்தி பூ, காய வைத்த நெல்லிக்காய், அவுரி விதை மூன்றையும் எடுத்துக் கொள்ளவும். இதை சம அளவு எடுத்து அம்மி கல்லில் அல்லது மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த இந்த கலவையை தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை வெள்ளை முடி உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். தேய்த்த பின்னர் அரை மணி நேரம் கழிந்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நரை முடி இயற்கையாகவே கருப்பாக மாறி விடும்.