நாளுக்கு நாள் வெள்ளை நரை அதிகரித்துக் கொண்டே செல்கிறதா? அப்போ இது ஒன்று தான் பெஸ்ட் தீர்வு!
நாளுக்கு நாள் வெள்ளை நரை அதிகரித்துக் கொண்டே செல்கிறதா? அப்போ இது ஒன்று தான் பெஸ்ட் தீர்வு!
இன்றைய மோசமான வாழ்க்கை முறையால் சிறு குழந்தைகளுக்கு கூட எளிதில் இளநரை பாதிப்பு ஏற்படுகிறது.
வைட்டமின் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் ஏற்படும் இளநரை பாதிப்பை சில தினங்களில் சரி செய்ய விருப்பப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறையை பின்பற்றி வரவும்.
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய்
சின்ன வெங்காயம்
வெந்தயம்
தேங்காய் எண்ணெய்
கறிவேப்பிலை
மருதாணி
எலுமிச்சை சாறு
செய்முறை:
ஒரு கப் நெல்லிக்காயை விதை நீக்கி காயவிட்டு எடுத்துக் கொள்ளவும். அதேபோல் ஒரு கைப்படி மருதாணி மற்றும் கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி கொள்ளவும்.
பிறகு ஒரு கப் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி மைய்ய அரைத்து வடை போல் தட்டி வெயிலில் காயவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/4 கப் வெந்தயம் போட்டு மிதமான தீயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
அதேபோல் காயவைத்த கறிவேப்பிலை, மருதாணி, சின்ன வெங்காயம் மற்றும் நெல்லிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.