முதியவரை நோகடித்த சிவகுமார்… அன்று செல்… இன்று சால்வையா..?
நடிகர், சொற்பொழிவாளர், மேடை பேச்சாளர் என பல முகங்கள் கொண்டவர் நடிகர் சிவகுமார். சிவக்குமார் தற்போது சில பொது நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். அப்படி அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளினால் தொடர்ந்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இந்நிலையில் பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில் பங்கேற்ற சிவகுமார் மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கிய போது, முதியவர் ஒருவர் ஆசை ஆசையாய் ஓடி வந்து சால்வை அணிவிக்க முயன்றார். சிவக்குமார் அதனை பறிங்கி கடும் கோபத்துடன் தூக்கி எறிந்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர, சிவக்குமாரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.