மார்ச் 15க்கு பின் நடக்கப் போதுவது என்ன ?
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருந்ததால் paytm செயலிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் பிபிபிஎல் அனைத்து பரிவர்த்தனைகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் paytmன் UPI பரிவர்த்தனைகளில் பாதிப்பு ஏற்படுமா என பயனர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் இது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துள்ளது.
அதாவது பணம் செலுத்தும் சூழலில் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியில், ‘@paytm’ என்ற UPI ஹேண்டில் பயன்படுத்தும் Paytm Payments வங்கி வாடிக்கையாளர்களை பிற வங்கிகளுக்கு மாற்ற முயற்சி செய்ய வேண்டும் என NPCIயை RBI கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் வரும் மார்ச் 15ம் தேதிக்குப் பிறகு Paytm FASTagsஐ வாடிக்கையாளர்கள் யாரும் பயன்படுத்த முடியாது என்று ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு அதனை பயன்படுத்த முடியாத நிலையில், பேடிஎம்-க்கு பதிலாக மாற்று வழிகளை தொழில்நுட்ப நிபுணர்கள் வழங்கி வருகின்றனர்.அதன்படி, பேடிஎம்க்கு பதிலாக, NHAI FASTag, ஐசிஐசிஐ வங்கி FASTag, ஹெச்டிஎப்சி வங்கி FASTag, எஸ்பிஐ வங்கி FASTag மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி FASTag அறிவிக்கப்பட்டுள்ளன.
பயனர்களுக்கு எந்த வங்கி வசதியோ, அந்த வங்கியின் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து FASTag பெறலாம்.அல்லது குறிப்பிட்ட வங்கி கிளைக்கு நேரில் சென்று FASTag பெறலாம்.