புயல் பாதிப்பு… விவசாயிகளுக்கு ரூ.10,000 வட்டியில்லா கடன் சலுகையை அறிவித்தது மத்திய அரசு!
மிக்ஜாம் புயலின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.10,000 வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்த போது பெய்த பெருமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் மிக்ஜாம் புயலால் பாதிப்பை சந்தித்தது. இந்நிலையில், புகையிலை பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.10,000 வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தக துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட ‘ஃஎப்சிவி’ புகையிலை விவசாயிகள் படும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு, புகையிலை வாரியத்தின் விவசாயி நல நிதியிலிருந்து ரூ.
10 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கடன் தொகையானது 2023-24 அறுவடைப் பருவத்தில் ஏல விற்பனையின் போது ஈடு செய்து கொள்ளப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.