சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? ‘இந்த’ யோகாசனங்களை செய்து பாருங்கள்..
உலக சுகாதார மையம் நடத்திய ஒரு ஆவில், உலகளவில் 422 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு வாழ்வியல் மாற்றங்கள், உணவு பழக்கங்கள் என பல காரணங்கள் உள்ளன.
நமது தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலமாகவும், வாழ்வியல் மாற்றங்கள் மூலமாகவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர், மருத்துவர்கள். அப்படி நாம் தினசரி நடவடிக்கைகளில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது, யோகாசனங்கள்.
யோகா ஆசனங்களினால்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மட்டுமன்றி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைத்து உடல் நலனை பேணி பாதுகாத்துக்கொள்ளலாம். யோகாசனம் செய்வதால் உடலுக்கு மட்டுமன்றி, மனதுக்கும் அமைதி கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் யோகாசனங்களை இங்கு பார்ப்போம்.
1.தனுராசனா:
தனுராசனாவை செய்வதால், முதுகு, கழுத்து, காலின் பின்பகுதி ஆகியவை வலுவடையும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமன்றி, மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் வலி நீங்கவும் இந்த ஆசனத்தை செய்யலாம்.
எப்படி செய்ய வேண்டும்?
>தரையில் குப்புற படுக்க வேண்டும்
>கைகளை நன்றாக உயர்த்தில் கால்களை நன்றாக பின்பக்கமாக தூக்க வேண்டும். பின்னர் கைகளால் கால்களை பிடிக்க வேண்டும்.
>சிறிது நேரம் மூச்சை இழுத்து விட்டு, உங்கள் மார்பக பகுதியை தரையில் இருந்து தூக்க வேண்டும்.
>மூச்சை இழுத்து விடும் போது நேராக பார்க்கவும்.
>இப்படியே 15 முதல் 30 வினாடிகளுக்கு இருக்க வேண்டும்
சர்க்கரை நோயாளிகளுக்கு என்ன பயன்?
இந்த ஆசனம் வாய்வு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது கல்லீரல், குடல் மற்றும் கணையத்தில் மாயாஜால விளைவுகளை ஏற்படுத்துகிறது, இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை ஏற்படும்.
2.அர்த்த மத்சேந்திரசனா:
அர்த்த மத்சேந்திரசனாவை கை, இடுப்பு மற்றும் கால்களை உபயோகித்து செய்ய வேண்டும். இதை மாதவிடாய் காலத்திலும், கர்ப்ப காலத்திலும் செய்வதை தவிர்க்கவும்.