சென்னை வரும் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!
தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். குறிப்பாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு விரைவு ரயில்களில் அதிகமான பயணிகள் பயணம் செய்கின்றனர். அவர்களில் பெரும்பாலும் பரங்கிமலை, கிண்டி, திநகர் மற்றும் பிற நிலையங்களுக்கு செல்ல தாம்பரத்தில் இறங்குகின்றனர். அது மட்டுமில்லமல் சென்னை எழும்பூர் வரை ரயில் டிக்கெட் எடுத்துவிட்டு தாம்பரத்தில் இறங்கி புறநகர் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
ஆனால் திநகர் வரை முன்பதிவு செய்யப்பட்ட பயணி புறநகர் ரயிலில் பயணித்ததால் அந்த பயணிக்கு டிக்கெட் பரிசோதகர் அபராதம் விதித்துள்ளார். இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் அதிரடி உத்தரவு வெளியாகி இருக்கிறது. அதாவது முன்பதிவு செய்துள்ள டிக்கெட் அல்லது உயர் வகுப்பு டிக்கெட்டுகளை வைத்திருக்கும் அனைத்து பயணிகளும் புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.