நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்… அப்போ இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.!
நம்முடைய உடல் சீராக இயங்குவதற்கு தூக்கம் முக்கியமான ஒன்று. பிறந்த குழந்தை 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்கும்.
பெரியவர்கள் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை இரவில் தூங்க வேண்டும்.
சீராக தூங்குவதற்கு உடலையும், மனதையும் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
இரவில் தூக்கம் இல்லாமல் பகல் பொழுதில் தூங்குவது அல்லது நீண்ட நேரம் தூங்குவது உடல் நலத்தை பாதிக்கும். நீண்ட நேரம் அசைவின்றி தூங்குவதால் தசைகளின் இயக்கம் குறைந்து உறுப்புகளின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும்.
இதனால் சோம்பல், அலுப்பு போன்றவை ஏற்படும். நீண்ட நேரம் ஒரே அமைப்பில் உறங்கினால் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக நேரம் தூங்குவதால் மூளையில் உள்ள நரம்பு கடத்திகளில் செயல்பாடு குறைந்து நினைவாற்றல் இழப்பு ஏற்படும்.
நீண்ட நேரம் தூங்குவதால் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் செரோடோனின் அளவு குறையும். இதனால் தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் சிந்திக்கும் திறன், தீர்வு காணும் திறன், எதிர்மறையான மனநிலை போன்றவை உண்டாகும். சீரற்ற நேரத்தில் தூங்குவதால் மன அழுத்தம், மனசோர்வு, மறதி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
* இதனால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் அதிகரிக்கும். உடல் பருமன் நோய்க்கு வழிவகை செய்யும். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படும்.