காலிஃப்ளவர் அதிக அளவில் உட்கொள்வது நன்மையா? தீமையா?
மூளையைப் போன்று தோற்றமுடைய காலிபிளவர் சாப்பிடுவதால் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. புற்றுநோயை தடுக்கும்.
நார்ச்சத்து, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு மருந்தாக உதவுகிறது.
கர்ப்பிணி பெண்கள் காலிபிளவர் சாப்பிடுவதால் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகு தண்டு வளர்ச்சிக்கு பெரிதும் உதவு.ம் மெக்னீசியம், பொட்டாசிய,ம் கால்சியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதயத்தை பலமாக்கும். கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிகளை காலிபிளவர் நீக்கும். சிறிதளவு காலிபிளவர், பூண்டு, மிளகு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து குடித்தால் மூட்டு வலி, வாதவீரம், வீக்கம் போன்றவை சரியாகும்.
உடல் வலிமை பெறும். விளக்கெண்ணெயுடன் காலிஃப்ளவர் இலையை வதக்கி காயப்பட்ட இடத்தில் பத்துபோட்டால் வலி, வீக்கம் போன்றவை சரியாகும்.
காலிபிளவர் பூவை மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து குடித்தால் இதயம் வலுப்பெறும். எலும்பு பலவீனம் அடையாமல் இருக்கும்.
ரத்த அழுத்தத்தை குறைக்கும். ரத்தம் உறைதலை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. காலிஃப்ளவரை சாப்பிடுவதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி கட்டுப்படும்.