ஜான்வி கபூர் ஃபிட்னெஸ்
நன்றி குங்குமம் டாக்டர்
பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் தடக் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கியவர்.
இவர் தற்போது தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார். தனது ஃபிட்னெஸ் ரகசியம் குறித்து ஜான்வி கபூர் பகிர்ந்து கொண்டவை:நான் ஒரு ஃபிட்னெஸ் ஃப்ரீக் என்று சொல்லலாம். கடந்த சில காலங்களாக தினசரி உடற்பயிற்சி செய்வதை தீவிரமாக கையாண்டு வருகிறேன். ஏனென்றால், ஒரு காலத்தில் அதிக உடல் எடையுடன் இருந்தேன்.
எப்போது சினிமாவுக்குள் வந்தேனோ அது முதல் ஃபிட்னெஸின் அவசியத்தை புரிந்து கொண்டேன். தற்போது, நான் கடின பயிற்சிகள் கூட செய்யும் அளவிற்கு தீவிர உடற்பயிற்சி செய்ய விரும்புபவளாக மாறிவிட்டேன். இதற்கு எனது உடற்பயிற்சியாளர் நம்ரதாபுரோஹித்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
அவருடைய மேற்பார்வையில்தான் இந்த கடின பயிற்சிகளை எல்லாம் என்னால் செய்ய முடிகிறது. என்னைப் பொருத்தவரை, எந்தவொரு உடற்பயிற்சி முறை துவங்குவதற்கு முன்பும் தகுதிவாய்ந்த உடற்பயிற்சி நிபுணரிடம் இருந்து வழிகாட்டுதலைப் பெற்று கொண்டு துவங்குவதே நல்லது.
ஒர்க்கவுட்ஸ்
எனது உடற்பயிற்சியானது கார்டியோ, வலிமை பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றின் கலவையாகும்.
மேலும், தினசரி நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்றவற்றை உள்ளடக்கிய 45 நிமிட கார்டியோ அமர்வுடன் எனது நாளைத் தொடங்குகிறேன். இது எனது உடலில் சேருகின்ற தேவையற்ற கலோரிகளை எரிக்கவும், இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.