இதை நினைவிடம் என்ன சொல்வதற்கு பதில் கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம் – ரஜினிகாந்த்..!
தமிழக அரசின் அறிவிப்பின்படி, சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கலை, இலக்கியம், அரசியல் உள்ளிட்ட சாதனைகளை நினைவு கூறும் வகையில் நினைவிட முகப்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை மெரினாவில் புனரமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் முன்பு நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தை பொதுமக்களின் பார்வைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களான வைகோ, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “மிகவும் அருமை. மிகவும் அற்புதம். கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். அவ்வளவு அருமையாக உள்ளது” என்றார்.