மக்கள் அதிர்ச்சி..! பாசஞ்சர் ரயில் டிக்கெட் கட்டணம் 100 சதவீதம் உயர்வு..!
நகரங்கள் முதல் தொலைதூர நகரங்கள் வரை பயணிக்க ரயில்களை தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில் பேருந்துகளை விட குறைவான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தங்களின் நிதிச் சுமையை பெரிதும் குறைக்க உதவி செய்கிறது.
இந்த சூழலில் தெற்கு ரயில்வே முக்கியமான நடவடிக்கையை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சாதாரண பேசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றி வருகின்றனராம். இதன்மூலம் பயண நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. டிக்கெட் கட்டணம் தான் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். இது தினசரி பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு சுமையாக மாறியிருக்கிறது.
டிக்கெட் கவுன்ட்டருக்கு சென்று டிக்கெட் வாங்கும் போது கட்டண உயர்வை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்கிறதாம். பலரும் கலக்கத்துடன் டிக்கெட் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக சென்னை டூ திருப்பதி பேசஞ்சர் ரயிலில் டிக்கெட் கட்டணம் 35 ரூபாயாக இருந்தது. இது தற்போது 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னை கடற்கரை டூ வேலூர் செல்லும் ரயில், சென்னை எழும்பூர் டூ புதுச்சேரி செல்லும் ரயில் ஆகியவற்றின் டிக்கெட் கட்டணம் 65 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக அதிகரித்திருப்பதாக தெரிகிறது.