இதில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி கிடைக்கும்..!
இந்திய தபால் துறையானது பல்வேறு முதலீட்டு திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அதில் சூப்பரான சேமிப்பு திட்டம் குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டத்தின் பெயர் தேசிய சேமிப்பு தொடர் வைப்புக் கணக்கு (National Savings Recurring Deposit Account) திட்டம் என்பதாகும். இதில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி கிடைக்கும். அதனால் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் லாக் இன் காலம் 60 மாதங்கள் அல்லது 5 ஆண்டுகள் ஆகும்.
இதில் குறைந்தபட்சம் ரூ.100ல் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். மேலும் இதில் தனி நபர் அல்லது 3 பேர் வரை கூட்டாக கணக்கு தொடங்கலாம். மேலும் இதில் அட்வான்ஸ் டெபாசிட் என்ற விருப்பமும் வழங்கப்படுகிறது. அதாவது 5 ஆண்டுகளுக்கான முதலீடு மொத்தமாக ஒரே முறையில் டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தில் சேர்ந்து 12 தவணைகளை செலுத்தியவர்கள் லோன் வாங்கும் வசதியும் இருக்கிறது.