காதலிக்க நேரமில்லை: மெரினாவில் உருவான எவர்கிரீன் காமெடி படத்தின் கதை!
சினிமாவில் மினிமம் கேரண்டி வகைக்குள் எப்போதும் பத்திரமாக இருக்கிறது காமெடி. இதில் ஹாரர் காமெடி, த்ரில்லர் காமெடி, பிளாக் காமெடி, டார்க் காமெடி என வகைகள் வரிசைகட்டி நின்றாலும் ரொமான்டிக் காமெடிக்கும் ரசிகர்கள் தனியிடம் கொடுத்து வைத்திருக்கிறார்கள்.
அப்படியொரு ‘எவர்கிரீன் ரொமான்டிக் காமெடி’ படம் ‘காதலிக்க நேரமில்லை’.
இயக்குநர் ஸ்ரீதரும் அவர் நண்பர் சித்ராலயா கோபுவும் வழக்கமாக மெரினா கடற்கரையில் சந்திப்பது வழக்கம். ஒருநாள், ‘நாம் ஏன் காமெடி படம் பண்ணக் கூடாது?’ என்று கேட்டார் கோபு. பார்வையாளர்கள் தன்னிடம் இருந்து காமெடியை எதிர்பார்க்க மாட்டார்கள் என முதலில் தயங்கினார் ஸ்ரீதர்.
பிறகு ஏற்றுக்கொண்டார். அந்தப் படம்தான், டிரெண்ட் செட்டராக மாறிய ‘காதலிக்க நேரமில்லை’. ஸ்ரீதர் இயக்கிய இந்தப் படத்தின் கதையை அவருடன் இணைந்து எழுதியது சித்ராலயா கோபு. முழு கதையும் திரைக்கதையும் மெரினா கடற்கரையில் உருவானது.
இந்தப் படம் மூலம்தான் நடிகராக அறிமுகமானார், மலேசியாவில் இருந்து வந்திருந்த ரவிச்சந்திரன். முத்துராமன், நாகேஷ், டி.எஸ்.பாலையா, ராஜஸ்ரீ, சச்சு, காஞ்சனா, வி.எஸ்.ராகவன் உட்பட பலர் நடித்தனர்.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை அமைத்தனர். ‘நெஞ்சத்தை அள்ளி’, ‘நாளாம் நாளாம்’, ‘என்ன பார்வை இந்தப் பார்வை’, ‘உங்க பொன்னான கைகள்’, ‘அனுபவம் புதுமை’, ‘மலரென்ற முகமொன்று’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘மாடிமேலே மாடி கட்டி’ உட்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன.
இந்தப் படத்தில் நாகேஷின் ஓஹோ புரொடக்ஷன்ஸ், அவர், பாலையாவிடம் கதை சொல்லும் காமெடி, அடேடே ஹிட். அதில் நாகேஷ் கதை சொல்லும் விதமும் அதற்கு டி.எஸ்.பாலையா காட்டும் எக்ஸ்பிரஷனும் அதிகம் ரசிக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் வானொலியில்