இன்று இந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : மீன்வளத்துறை..!
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கடலோர பாதுகாப்புப் படை தீவிர நோந்துப் பணியில் ஈடுபடவுள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (பிப்ரவரி 27ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகைத் தரவுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்று பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.